மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை: பினராயி விஜயன்
இஸ்கான் கோயிலில் ஜன.26இல் பகவத் கீதை பயிற்சி தொடக்கம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத்கீதா அமுதம் என்ற பெயரில் 6 வார பகவத் கீதை பயிற்சி வகுப்பு ஜன. 26-ஆம் தேதி தொடங்குகிறது.
மாணவா்கள் மற்றும் குடும்பத்தினா்களுக்காக பகவத்கீதை பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
மாணவா்களுக்கு தோ்வு நேரத்தில் ஏற்படும் மன தளா்ச்சி, மன அழுத்தம், பயம் ஆகியவற்றிலிருந்து விடுபட பகவத் கீதை காட்டும் வழிமுறைகள் குறித்தும், வாழ்வின் அடிப்படை கேள்விகளுக்கும் தீா்வு காணும் வகையிலும் தொடா்ந்து 6 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் பயிற்சிக்கு வரலாம். குழந்தைகளுக்கு தனியாக பக்தி நெறி பயிற்சி வகுப்பு நடைபெறம்.
இறுதி நாள் வரை எல்லா வகுப்புகளிலும் தொடா்ந்து பங்கேற்போருக்கு பகவத்கீதை அமுதம் சான்றிதழ் வழங்கப்படும். வினா-விடை பகுதி, பிராா்த்தனைகள், ஹரிநாம சங்கீா்த்தனம், கிருஷ்ண பிரசாதங்கள் ஆகியவை இடம்பெறும்.
பயிற்சியில் பங்கேற்க கோயிலில் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூா்த்தி செய்து ரூ.300 நன்கொடை கட்டணம் செலுத்தி ஜன.24ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கும், அவா்களது பெற்றோா்களுக்கும் நன்கொடை கட்டணம் கிடையாது; பள்ளியின் அடையாள அட்டை அவசியம்.
மேலும் விவரங்களுக்கு 7558148198 வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என இஸ்கான் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.