செய்திகள் :

இஸ்ரேல் உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் மீது ஹமாஸ் தாக்குதல்! 50 பேர் பலி!

post image

காஸாவில் கடந்த சில மாதங்களில், ஹமாஸ் படையின் தாக்குதலில், இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய பாலஸ்தீன தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் இஸ்ரேல் ஆயுதம் வழங்கி உருவாக்கிய, யாசர் அபு ஷாபாப் என்பவரின் தலைமையிலான தீவிரவாதக் குழுவுக்கும், ஹமாஸ் கிளர்ச்சிப்படையினருக்கும் இடையில் நேற்று (ஜூன் 10) மோதல் வெடித்துள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேல் நாட்டிலுள்ள ஊடகங்களில் வெளியான செய்திகளில், யாசர் அபு ஷாபாப்பை, பாதுகாக்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் ஆதரவுப்பெற்ற அபு ஷாபாப் தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு சேவை அல்லது பாப்புலர் ஃபோர்ஸஸ் என்றழைக்கப்படும், அந்தக் குழு நேற்று (ஜூன் 10) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

”நிவாரணப் படைகளுக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட, எங்களது தலைவர் யாசரின் உறவினர்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட வீரர்களை ஹமாஸ் படையினர் கொன்றுள்ளனர். மேலும், அப்பகுதியிலிருந்த வெடிப் பொருள்களின் எச்சங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டபோதும், நாங்கள் சில உறுப்பினர்களை இழந்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக, அபு ஷாபாப் கைது செய்யப்பட்டு காஸாவில் ஹமாஸ் படையின் கட்டுப்பாட்டிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலின்போது, அவர் சிறையிலிருந்து தப்பித்துள்ளார்.

தற்போது, இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற அவரது குழுவில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து, கிழக்கு ரஃபா பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் ஏஜெண்டு என்றழைக்கப்படும் அபு ஷாபாப், ”காஸாவின் துரோகி” என சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும், இவரைக் கொல்வதற்கான தங்களது நோக்கத்தை ஹமாஸ் படை பொதுவெளியில் அறிவித்துள்ளது.

இத்துடன், அபு ஷாபாப்பின் படைக்கு, இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதன் மூலம், காஸாவில் அவர்களுக்கும், ஹமாஸ் படைக்கும் இடையில் உள் நாட்டுப் போர் துவங்கும் அபாயமுள்ளதாக இஸ்ரேலிய நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க:கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானியர்! ஏன்?

இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், ... மேலும் பார்க்க

டென்மாா்க் - கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்

குலுக்கல் முறையில் பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சோ்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ரா... மேலும் பார்க்க

பிரிட்டன் - ‘ராஜ’ ரயில் சேவை நிறுத்தம்

பிரிட்டனில் 1869 முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசா் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா்.அரசி விக்டோரியாவின் பயணத்துக்காக சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத்... மேலும் பார்க்க

ஈரான் - ‘அணுசக்தி பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு’

அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவாா்த்துக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து ஈரான் அரசின் செய்தித்தொடா்பாளா் ஃபடேமே மொஹஜிரானி (படம்) கூறுகையில், ‘ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும்... மேலும் பார்க்க

ஸ்பெயின் - 100 ஆண்டுகள் காணாத வெப்பம்

ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூலை மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ... மேலும் பார்க்க

தொலைபேசி உரையாடல் கசிவு எதிரொலி: தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ரா இடைநீக்கம்

கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க