ஈரான் - ‘அணுசக்தி பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு’
அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவாா்த்துக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
இது குறித்து ஈரான் அரசின் செய்தித்தொடா்பாளா் ஃபடேமே மொஹஜிரானி (படம்) கூறுகையில், ‘ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்துவருகிறோம்.
அந்தத் தாக்குதலால் கணிசமான பாதிப்பு ஏற்பட்டாலும், அணுசக்தி பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்புகளையும் பரிசீலித்துவருகிறோம்.
ஆனால் அது உடனடியாக தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை’ என்றாா்.