செய்திகள் :

20 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்..! டாடா ஹாரியர் இவி!

post image

டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் டாடா ஹாரியர் கார் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறும் வகையில் உருவாகியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விவரம் குறித்து பார்க்கலாம்.

கார்களுக்கான தேர்வுகளில் எந்த காரை வாங்கலாம் என சிந்திக்கும் போது டாடா நிறுவனத்தின் காரை தவிர்த்துவிட்டு செல்வது கடினம். அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் அரசிடமிருந்து வரிச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில். டாடா நிறுவனம், ஹாரியர் இவியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஹாரியர் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்களின் முழு விலை விவரங்களையும், டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை எவ்வளவு?

இதன், தொடக்க வேரியண்டான அட்வெஞ்சர் 65-யின் ஷோரூம் விலை சுமார் ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், அட்வெஞ்சர் எஸ் 65 ரூ.21.99 லட்சமாகவும், ஃபியர்லெஸ் பிளஸ் 65 ரூ.23.99 லட்சமாகவும், ஃபியர்லெஸ் பிளஸ் 75 ரூ. 24.99 லட்சமாகவும், டாப் வேரியண்டான எம்பவர்டு 75 ரூ.27.49 லட்சமாகவும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

இந்த காரில் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. 120 ஹவர் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 25 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

பேட்டரி

75 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

திறன்

390 பிஹெச்பி திறனையும், 504 முறுக்கு விசைத் திறனையும் வெளிப்படுத்தும்.

அதிகபட்ச வேகம்

மணிக்கு 180 கி.மீட்டர் வரை செல்லும்

பயண வகைகள்

6 வகையான நிலப்பரப்புக்கு ஏற்றவகையில், நார்மல், பனி, சேறு, மணம், பாறை, புல் தரை என பல்வேறு மோட்கள் உள்ளன.

சார்ஜிங்

120 கி. வார் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங், 25 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் ஏறும். 7.2 கி.வாட் ஏசி 10.7 மணி நேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறும்.

பொழுதுபோக்கு அம்சம்

ஹர்மன் மற்றும் சாம்சங் நியோ கியூஎல்இடி தொழில்நுட்பத்துடன் கூடிய 14.5 அங்குல சினிமாடிக் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே உள்ளது.

தொழிலக உற்பத்தியில் 9 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் முந்தைய ஒன்பது மாதங்களில் காணாத சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உ... மேலும் பார்க்க

டிவிஎஸ் வாகன விற்பனை 20% உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,02,001-... மேலும் பார்க்க

பவர்கிரிட் ஒப்பந்தத்தை வென்ற ஹார்டெக்!

புதுதில்லி: கர்நாடகாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான பவர்கிரிட் நிறுவனத்திடமிருந்து ரூ.138 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக இ.பி.சி. நிறுவனமான ஹார்டெக் இன்று தெரிவித்தது.இந்த ஒப்பந்தம் 400 கிலோவோ... மேலும் பார்க்க

புதிய ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

சென்னை: இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அதன் முதன்மை மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூப் ஐ ரூ.1.03 லட்சத்தில் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டில் பங்குச் சந்தைகள் பலவீனமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டதால், இன்றைய அந்நிய செலவானி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 9 காசுகள் சரிந்து ரூ.85.68 ஆக நிறை... மேலும் பார்க்க

ரூ. 10 ஆயிரத்தில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்!

விவோ நிறுவனத்தின் டி 4 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று முதல் (ஜூலை 2) அறிமுகமாகியுள்ளது. ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் சிறப்பான அம்சங்களுடனும் அதிக பேட்டரி திறனுடனும் இந்த ஸ்மார்ட்போன் அறிம... மேலும் பார்க்க