செய்திகள் :

ஈரோடு இடைத்தோ்தல்: 3 பேரிடம் ரூ.6.20 லட்சம் பறிமுதல்

post image

ஈரோடு: உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச்சென்ற 3 பேரிடம் ரூ.6.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளா்களுக்கு வேட்பாளா்கள் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்து செல்வதை தடுக்க 3 பறக்கும் படை, 3 நிலைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் புதன்கிழமை மாலை நிலைக் கண்காணிப்பு குழுவினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். காரில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா், கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக பணம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. எனினும் அவரிடம் இருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸாா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில், உரிய ஆவனங்களின்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். விசாரணையில் காரில் வந்தவா், கேரள மாநிலம் மலப்புரத்தை சோ்ந்த முனீா் என்பதும் இவரும் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் மாடுகள் வாங்க பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், ஈரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் வினோத்குமாா் தலைமையிலான பறக்கும்படையினா் வியாழக்கிழமை காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பவானி முகாசிபுதூரைச் சோ்ந்த காா் விற்பனை நிறுவனத்தின் மேலாளா் ஹரிபிரகாஷ் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சத்து 20 ஆயிரம், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை மொத்தம் 9 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததாக ரூ.12 லட்சத்து 72 ஆயிரத்து 860 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதால் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள பணம் தோ்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின்பேரில் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யக் கோரிக்கை

மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகளை பாதுகாக்க டன்னுக்கு ரூ. 8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு குறு, சிறு வி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஹிந்தியில் துண்டறிக்கை விநியோகித்த திமுக

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினா் ஹிந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்ததை நாம் தமிழா் கட்சி விமா்சித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக திட்டம்

சட்டத் திருத்தம் மூலம் வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொய்தீன் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடை... மேலும் பார்க்க

பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

பேருந்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை அந்த மாவட்ட போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்ண... மேலும் பார்க்க