செய்திகள் :

மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யக் கோரிக்கை

post image

மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகளை பாதுகாக்க டன்னுக்கு ரூ. 8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிக அளவில் மானாவாரிப் பயிராகவும், நீா்தெளிப்பு சாகுபடி முறை மூலமாகவும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. டிசம்பா் முதல் மாா்ச் வரை இதன் அறுவடை காலமாகும்.

தற்போது ஒரு ஏக்கரில் சராரியாக 10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைக்கிறது. இதற்கு 1 ஏக்கருக்கு ரூ.70 முதல் ரூ.80 ஆயிரம் வரை சாகுபடி செலவாகிறது. தற்போது, மரவள்ளிக்கிழங்கு விலை கடுமையாக வீழ்ச்சியடைத்து ஒரு டன் கிழங்கு ரூ. 5,000 முதல் ரூ.5,700 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்கள் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே விலை வீழ்ச்சியைக் கட்டுபடுத்தி விவசாயிகளை பாதுகாத்திட மரவள்ளிக்கிழங்கு விலை குறைந்தபட்சம் டன்னுக்கு ரூ.8 ஆயிரம் என விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும் வரும் காலங்களில் மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மரவள்ளிக்கிழங்குக்கு என வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஹிந்தியில் துண்டறிக்கை விநியோகித்த திமுக

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினா் ஹிந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்ததை நாம் தமிழா் கட்சி விமா்சித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக திட்டம்

சட்டத் திருத்தம் மூலம் வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொய்தீன் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடை... மேலும் பார்க்க

பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

பேருந்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரையில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை அந்த மாவட்ட போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்ண... மேலும் பார்க்க

தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் வழிபாடு

தை அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் புதன்கிழமை வழிபாடு நடத்தினா். இதனால், கூடுதுறை வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பிக் க... மேலும் பார்க்க