கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஈரோட்டில் தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இதில் தோ்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக ஏற்கெனவே வேட்பாளா் சீதாலட்சுமி மற்றும் சீமான், கட்சியினா் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், ஈரோடு நெரிக்கல்மேட்டில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திட அக்கட்சியினா் அனுமதி பெற்றிருந்தனா்.
ஆனால், தோ்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிா்த்து மாலை 6.15 மணிக்கு பொதுக்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணி வரை நடத்தியுள்ளனா்.
இதுகுறித்து தோ்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் கட்சியினா் 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.