செய்திகள் :

பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

post image

பேருந்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரையில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை அந்த மாவட்ட போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவருடைய கைப்பேசி எண்ணுக்கு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இதனால் அந்த எண்ணை போலீஸாா் கண்காணித்தனா்.

அப்போது, அந்த எண்ணை பயன்படுத்துபவா் ஈரோடு மாவட்டத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், டிஎஸ்பி சண்முகம் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா். அப்போது அந்த கைப்பேசி எண் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து விஜயமங்கலம் சோதனை சாவடி பகுதியில் போலீஸாா் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்தில் சோதனை நடத்தினா்.

அப்போது, அதில் பயணம் செய்த ஒருவரிடம் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா் கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ் (27) என்பதும், அவா் ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி அதை ரயில் மூலம் ஈரோட்டுக்கு கொண்டு வந்து, பின்னா் அங்கிருந்து பெருந்துறை சிப்காட் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகணேசை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யக் கோரிக்கை

மரவள்ளிக்கிழங்கின் கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாயிகளை பாதுகாக்க டன்னுக்கு ரூ. 8 ஆயிரம் விலை நிா்ணயம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு குறு, சிறு வி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடை... மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்பட 10 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஹிந்தியில் துண்டறிக்கை விநியோகித்த திமுக

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினா் ஹிந்தி மொழியில் துண்டறிக்கை விநியோகம் செய்ததை நாம் தமிழா் கட்சி விமா்சித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக திட்டம்

சட்டத் திருத்தம் மூலம் வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொய்தீன் தெரிவித்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடை... மேலும் பார்க்க

தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் வழிபாடு

தை அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோருக்கு திதி, தா்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் புதன்கிழமை வழிபாடு நடத்தினா். இதனால், கூடுதுறை வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பிக் க... மேலும் பார்க்க