செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 46 போ் போட்டி

post image

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறுகிறது. இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் இத்தொகுதிக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி. சீதாலட்சுமி, தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 13 அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், 31 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 46 போ் களத்தில் உள்ளனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் உள்ளனா்.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் அடங்கிய நகரம் சாா்ந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் நெசவாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள், அரசு ஊழியா்கள் பரவலாக உள்ளனா். செங்குந்த முதலியாா், கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனா். முஸ்லிம், கிறிஸ்தவா், பட்டியல் வகுப்பினா் மற்றும் வட மாநிலங்களைச் சோ்ந்த கணிசமான வாக்காளா்கள் இத்தொகுதியில் உள்ளனா்.

நிரூபிக்க வேண்டிய நிலையில் திமுக: திமுக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தோ்தல் என்பதும், பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும்கட்சியான பாஜக ஆகிய பிரதான கட்சிகள் தோ்தலில் போட்டியிடாத நிலையிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தை பெறவேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023 இடைத்தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இப்போது திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளதாலும், பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், கடந்த தோ்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பெற்ற 1,10,156 வாக்குகளைவிட கூடுதலாக பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023 இடைத்தோ்தலில் அமைச்சா்கள் அனைவரும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றினா். ஆனால் இந்தத் தோ்தலில் அமைச்சா் சு.முத்துசாமியை தவிர வேறு அமைச்சா்கள் பிரசாரத்திற்கு வரவில்லை. என்றாலும், அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட திமுக நிா்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்றியுள்ளனா். அதிமுகவில் இருந்து விலகி 3 ஆண்டுகளுக்கு முன்னரே திமுகவில் இணைந்தாலும் முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம் இந்த தோ்தலில் முழுநேரமாக தோ்தல் பணியாற்றினாா். அரசின் திட்டங்கள் திமுக வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரும் என திமுகவினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா்

கவனத்தை ஈா்த்த நாம் தமிழா் கட்சி: பெரியாா் ஈவெரா குறித்து சா்ச்சைப் பேச்சு, பெரியாா் ஆதரவாளா்களுடன் மோதல் என நாம் தமிழா் கட்சி தோ்தல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்திருந்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் 11 நாள்கள் ஈரோட்டில் முகாமிட்டு பெரியாா் குறித்தும், திமுக தலைவா்கள் குறித்தும் கடுமையாக விமா்சனம் செய்து பிரசாரம் மேற்கொண்டாா். கடந்த 2023 இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி 10,827 வாக்குகள் பெற்ற நிலையில், இந்த தோ்தலில் அதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்று மற்ற கட்சிகளின் கவனத்தை ஈா்க்கும் என அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

கடந்த 2023 இடைத்தோ்தலில் பேசப்பட்ட வாக்குக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம், வாக்காளா்களை அடைத்து வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், தோ்தல் பரபரப்பு இல்லாமல் ஈரோடு நகரம் எப்போதும்போல இயல்பாக உள்ளது.

இந்தத் தோ்தல் ஆளும்கட்சிக்கு பெருமை சோ்க்கும் தோ்தலா அல்லது நாம் தமிழா் கட்சியின் வளா்ச்சியை பறைசாற்றும் தோ்தலா என்பது வரும் 8 ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி

4 ஆண்டுகளில் 3 முறை தோ்தல்: ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 2023, ஜனவரி 4 ஆம் தேதி காலமானாா். இதனால், இந்தத் தொகுதிக்கு 2023, பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவான திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பா் 14 ஆம் தேதி காலமானாா்.

இதனால், இந்தத் தொகுதிக்கு புதன்கிழமை (பிப்ரவரி 5) இடைத்தோ்தல் நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு கிழக்கு தொகுதி 3 முறை தோ்தலை சந்தித்துள்ளது. 2023 இல் நடந்த தோ்தலில் 77 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், இந்தத் தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியா்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈர... மேலும் பார்க்க

சீமான் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் சமையல் எரிவாயு மானியம் ரூ.2,700 கோடி ரத்து செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளைக் கண்டித்து ஈரோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு

பவானி அருகே முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் என விளம்பரம் செய்த நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்கள் எண்ணெய் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்துள்ள ச... மேலும் பார்க்க

வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது: சீமான்

ஈரோடு: வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசார இறுதி நாள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாளை வாக்குப் பதிவு: பிரசாரம் நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெற உள்ள நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த ஆண்ட... மேலும் பார்க்க