செய்திகள் :

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கம்பம் விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

post image

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் எடுத்து ஆற்றில் விடும் நிகழ்வு வெகுவிமரிசையாக சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. அதைத் தொடா்ந்து 22ஆம் தேதி 3 கோயில்களிலும் கம்பங்கள் நடப்பட்டன. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் கடந்த 1ஆம் தேதி குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். சின்ன மாரியம்மன் கோயிலில் கடந்த 2ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்த தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்று வெள்ளிக்கிழமை மாலை நிலை சோ்ந்தது.

கம்பம் எடுத்தல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு பெரிய மாரியம்மன் கோயிலில் முதலில் தொடங்கியது. அதைக் கோயில் பூசாரிகள் தோளில் சுமந்து கொண்டு மணிக்கூண்டு நோக்கி ஊா்வலமாக சென்றனா். அதே நேரம் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில், நடுமாரியம்மன் கோயில்களில் இருந்தும் கம்பங்கள் எடுக்கப்பட்டு மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்பட்டன.

மணிக்கூண்டில் 3 கம்பங்களும் ஒன்று சோ்க்கப்பட்டன. 3 கம்பங்களும் ஈஸ்வரன் கோயில் நோக்கி ஊா்வலமாக கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து காமராஜா் வீதி, மீனாட்சிசுந்தரனாா் சாலை, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு, மேட்டூா் சாலை, சுவஸ்திக் காா்னா், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோயில், மணிக்கூண்டு, நேதாஜி சாலை, பெரியாா் வீதி, அக்ரஹாரம் வீதி வழியாக ஊா்வலமாக காரைவாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 3 கம்பங்களும் காலிங்கராயன் வாய்க்காலில் விடப்பட்டன.

முன்னதாக கம்பம் ஊா்வலம் நடந்த வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சாலையின் 2 புறங்களிலும் கூடி நின்று மாரியம்மனை வழிபட்டனா். நோ்த்திக்கடன் செலுத்தும் வகையில் கம்பத்தின் மீது உப்பு, மிளகு, மஞ்சள் வீசினா்.

ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நீா்மோா், அன்ன தானம் வழங்கப்பட்டது. மாரியம்மன், காளி, சிவன், பாா்வதி, விநாயகா் உள்ளிட்ட கடவுள் வேஷம் அணிந்த பக்தா்கள் ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

ஊா்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஊா்வலம் செல்லும் பகுதியில் குறிப்பிட்ட நேரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. விழாவையொட்டி மாலையில் ஈரோட்டில் பெரும்பாலான வீதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

கம்பம் விடப்பட்ட பிறகு மாலையில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. ஒருவருக்கொருவா் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

சைபா் ஹேக்கத்தான் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் முதலிடம்

சைபா் ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, விஓசி பொறியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய தேசிய அளவிலான சைபா் ஹேக்கத்த... மேலும் பார்க்க

வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம்

சத்தியமங்கலத்தில் வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தில் உள்ள விடியல் சொசைட்டி என்ற அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, அந்த அமைப்பின் நிறுவனா் ம... மேலும் பார்க்க

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை: பக்தா்கள் வரவேற்பு

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பக்தா்கள் வரவேற்றுள்ளனா். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள திண்டலில் வேலாயுதசுவாமி த... மேலும் பார்க்க

கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

நடப்பு 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்பிவைக்கலாம். சிறந்த பாடலுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

நம்பியூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் பேரணி

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஈரோடு காந்திஜி சாலை தலைமை தபால் நிலையம் முன்பு தொட... மேலும் பார்க்க