செய்திகள் :

உகாண்டாவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 40 வீடுகள்! 13 பேர் பலி

post image

கிழக்கு உகாண்டாவில் உள்ள 6 கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள உகாண்டா செஞ்சிலுவைச் சங்கத்தினர் கூறுகையில், “மண்ணில் புதைந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மண்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது” என்றனர்.

தீயினால் காற்று மாசு: ஆண்டுக்கு 1.5 மில்லியன் மக்கள் பலி!

மண்ணில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 பேர் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உகாண்டாவில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது வழக்கமானது. ஆனால், புதன்கிழமை இரவு பெய்த கடுமையான மழையின் காரணமாக புலம்புலி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

போா்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்

அதிநவீன புல்டோசர் வாகனம் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருப்பதால் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிலச்சரில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது- ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்

தீயினால் காற்று மாசு: ஆண்டுக்கு 1.5 மில்லியன் மக்கள் பலி!

தீயினால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகுவதாக ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.காட்டுத் தீ, நிலப்பரப்பில் ஏற்படுத்தப்படும் செயற்கை தீ ஆகியவற்றால் ஏற்படும் காற... மேலும் பார்க்க

நியூசி. பிரதமர் கார் விபத்து!

நியூசிலாந்து பிரதமர் கார் மீது போலீஸ் கார் மோதி விபத்தானது.நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன் மற்றும் அந்நாட்டு நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் இருவரும் புதன்கிழமை (நவ. 27) வெலிங்டனில் உள்ள விமான ... மேலும் பார்க்க

போா்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெறுவதால் மட்டும் அந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடாது என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா். லெபனான் போா் நிறுத்த ஒப்பந்தத்த... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்து தலைவா் கைது- ஐ.நா. தலையிட மத்திய அரசு வேண்டுகோள்

‘வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடா்வதும் ஹிந்து சமூக தலைவா்கள் கைது செய்யப்படுவதும் அந்நாட்டின் இடைக்கால அரசு அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பதைப் பிரதிபலிக்கிற... மேலும் பார்க்க

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக இந்திய வம்சாவளி அறிவியலாளா்- டிரம்ப் நியமனம்

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஹெச்) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அறிவியலாளா் ஜெய் பட்டாச்சாா்யாவை நியமித்து அந்நாட்டின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் அறிவிப்பு ... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபருக்கு கொலை மிரட்டல்: துணை அதிபா் மீது வழக்கு

பிலிப்பின்ஸ் அதிபா் ஜூனியா் ஃபொ்டினண்ட் மாா்க்கஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக அந்த நாட்டுத் துணை அதிபா் சாரா டுடோ்த்தே மீது போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனா். கடந்த 2022-ஆம் ஆண்டு ந... மேலும் பார்க்க