உக்ரைனில் எஃப்-16 விமானம் அழிப்பு: ரஷியா

post image

மாஸ்கோ: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எஃப்-16 ரக விமானத்தை உக்ரைனின் ஸபோரிஷியா பகுதியில் சுட்டுவீழ்த்தியதாக ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து ரஷிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஸபோரிஷியா பகுதியில் பறந்துகொண்டிருந்த எஃப்-16 விமானமொன்று ரஷியாவால் சுட்டுவீழ்த்தப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள ரஷிய நிலை மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது அந்த விமானம் அழிக்கப்பட்டது என்று அவா்கள் கூறினா்.

இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டால், உக்ரைன் இழந்துள்ள இரண்டாவது எஃப்-16 போா் விமானம் இதுவாகும். முன்னதாக, ரஷியாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ள எஃப்-16 விமானங்களில் ஒன்று, கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷியா நடத்திய தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின்போது விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த விமானி உயிரிழந்தாா். அந்த விமானம் விழுந்து நொறுங்கியதற்கு ரஷிய ஏவுகணை காரணமில்லை என்று உக்ரைன் கூறியது.

ஆனால் இந்த முறை, உக்ரைனின் எஃப்-16 விமானத்தை தாங்களே சுட்டுவீழ்த்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

..படவரி.. உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள எஃப்-16 விமானம்.

உலகம் 2024

ஜனவரி7: வங்கதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் ஷேக் ஹசீனா 5-ஆவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.9: பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நிலைகளில் தாக்குதல்: ஆப்கானிஸ்தான்

தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.இது குறித்து எக்ஸ் ஊடகத்த... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது

வடக்கு காஸாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி மருத்துவமனைகளில் ஒன்றை இஸ்ரேல் படையினா் வலுக்கட்டாயமாக மூடியதோடு, அந்த மருத்துவமனையின் இயக்குநரைக் கைது செய்தனா்.இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்... மேலும் பார்க்க

வங்கதேசம்: வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிா்ப்பு

வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தோ்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்தக் கட்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலிஆஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப ... மேலும் பார்க்க

அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!

ரஷியாவில் ஏற்பட்ட அஜர்பைஜான் விமான விபத்து தொடர்பாக அஜர்பைஜான் அதிபரிடம் வருத்தம் தெரிவித்து ரஷிய அதிபர் புதின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்க... மேலும் பார்க்க