தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் முதல்வர் கோரிக்கை!
உக்ரைனுடனான சண்டையில் வட கொரிய வீரர்கள் பலர் உயிரிழப்பு!
கீவ்: உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளில் அந்நாட்டு ராணுவத்துக்கு உறுதுணையாக அதன் நெருங்கிய நட்பு நாடான வட கொரியா தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில், ரஷிய படைகளுடன் இணைந்து வட கொரிய வீரர்களும் உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷிய படைகளுடன் இணைந்து, வட கொரிய படைகளும் இப்போது போரிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை தென் கொரிய தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் வடக்கு எல்லையையொட்டிய குர்ஸ்க் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள, வட கொரிய படைகள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய உளவு முகமை உறுதிப்படுத்தியுள்ளது. தங்களின் எல்லையையொட்டிய ரஷிய பகுதிகளில் 7,000 வட கொரிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவு அமைப்பும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் இன்று(டிச. 16) வெளியிட்டுள்ள தகவலின்படி, தங்கள் நாட்டு ராணுவம் வடக்கு எல்லையையொட்டிய குர்ஸ்க் பகுதியில் எல்லையில் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 30 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.