செய்திகள் :

``உங்கள் பெற்றோர்களும் இப்படி நினைத்திருந்தால்..." - DINK கொள்கையாளர்களை சாடிய சந்திரபாபு நாயுடு

post image
ஆந்திராவைப் பொறுத்தவரையில், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் பல ஆண்டுகளாக அமலில் இருந்தது.

இவ்வாறான சூழலில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வரான சந்திரபாபு நாயுடு, ``இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று ஆந்திராவில் சட்டம் இருக்கிறது. இனி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வரப்போகிறோம்” என்று கடந்த அக்டோபர் மாதமே அறிவித்திருந்தார். அதன்படி கடந்த நவம்பரில், ஆந்திரப் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஆந்திர நகராட்சி சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்டன. அந்த மசோதாக்கள், இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட எவரும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கும் பிரிவுகளை நீக்கின.

சந்திரபாபு நாயுடு

இதற்கிடையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும், “இன்றைக்கு மக்களவைத் தொகுதிகள் குறையும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே, நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலை வந்திருக்கிறது” எனப் பேசினார். இவர்களின் கருத்துகள் விவாதமான நிலையில், தன் கருத்தை வலியுறுத்தும் விதமாக சந்திரபாபு நாயுடு மீண்டும் பேசியிருக்கிறார்.

ஆந்திராவின் நாராவாரிப்பள்ளேயில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ``உங்கள் பெற்றோர் நான்கு முதல் ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஆனால் நீங்கள் அதை ஒரு குழந்தை எனக் குறைத்தீர்கள். இப்போது நன்கு படித்தவர்கள் கூட இரட்டை வருமானம் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முறையைத் (DINK) தேர்வு செய்கிறார்கள் . அவர்களின் பெற்றோர்களும் இதேபோல் நினைத்திருந்தால், இன்று அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

சந்திரபாபு நாயுடு

ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் ஏற்கெனவே வயதான மக்கள்தொகையாலும், வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதங்களுடன் போராடி வருகின்றன. 2047 வரை மட்டுமே இந்தியாவில் மக்கள் தொகை இளைஞர்களால் நிரம்பியிருக்கும். அதன்பிறகு வயதானவர்களுடன் நாடு சவால்களைச் சந்திக்கும். எனவே, அதிக பிறப்பு விகிதங்களை ஊக்குவிக்கும் உடனடி நடவடிக்கைகள் அவசியம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில் - பரந்தூர் விசிட் பின்னணி

வருகிற 20 ஆம் தேதி பரந்தூருக்கு நேரில் செல்லவிருக்கிறார் தவெக கட்சியின் தலைவர் விஜய். புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் மத்தியில் உரையாற்றவும... மேலும் பார்க்க

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க``உண்மைதானே... 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க 9 தொகுதிகளையும், தி.மு.க 13 தொகுதிகளையும் கைப... மேலும் பார்க்க

MGR - எடப்பாடியை Overtake செய்யும் MODI? | DMK அமைச்சர்களின் Fun பொங்கல்| TVK VIJAY |Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில்,* அமைச்சர் மூர்த்தியைக் கலாய்த்து வீடியோ வெளியிட்ட ஜெயகுமார்!* துணை முதல்வர் மகனுக்கு இடங்கொடுக்க மேடையில் எழுந்து நிற்கச் சொன்னார்களா? - மதுரை ஆட்சியர் விளக்கம் * பொன்முடி... மேலும் பார்க்க