உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.
15.01.2025
மேஷம்
இன்று முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக்கடைப்பிடிப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ரிஷபம்
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களும் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டநிறம்: கருநீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
மிதுனம்
இன்று வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். மக்களின் தேவையறிந்து செயல்படுவது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம்
இன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை ஏற்படும் என்பதால் அதிக கவனம் செலுத்துவது, தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சிம்மம்
இன்று மனைவி, புத்திரர்களின் உடல்நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற மனசஞ்சலங்களும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி
இன்று குடும்ப வாழ்வில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதினால் ஒற்றுமை குறையாது. பொருளாதாரநிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் நற்பலன் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
துலாம்
இன்று திருமண காரியங்கள் தடைப்படும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். புதிய பொருட்சேர்க்கைகளும் ஆடை, ஆபரணமும் சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்
இன்று கமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபம் காணமுடியும். பணவிஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது உத்தமம். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாக கால தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
தனுசு
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் லாபங்களைப்பெற இயலாது. தொழிலார்களால் வீண்பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவிகளைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6
கும்பம்
இன்று பணியில் நிம்மதியான நிலைகள் ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
மீனம்
இன்று பெண்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தூக்கமின்மை, மனஉளைச்சல்கள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணவரவுகளில் தடைகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் வீண்செலவுகளைக் குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7