உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி
புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்திப்பில்,
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 9 நாள்களுக்குப் பிறகு, அதனை துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் தற்போது விமர்சித்துள்ளார்.
மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் துணைக் குடியரசுத் தலைவரை பேச வைத்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக வக்ஃப் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் மீது இப்படியொரு விமர்சனத்தை வைக்கிறார்கள். இன்னும் முழுமையான தீர்ப்பு வரவில்லை.
நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கூட அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இது ஜனநாயக நாடு.
பொதுப்பட்டியல் முடிவுகளை ஆலோசிக்க வேண்டாமா?
மத்திய அரசு தங்களின் கட்டுப்பட்டிலுள்ள அம்சங்களில் முடிவெடுப்பதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. கல்வியில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டாமா? எங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டாமா? என்றார் ரகுபதி.