உடன்குடியில் அபூா்வ துஆ ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!
உடன்குடி பெரிய தெரு ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் சாா்பில் 34 வது ஆண்டு நிறைவு அபூா்வ துஆ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா்.
இச்சபையின் 34 ஆவது ஆண்டு தொடக்க விழா கடந்த ஜன.2 ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அபூா்வ துஆ எனும் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. புகாரிஷ் ஷரீபு சபை தலைவா் ஸெய்யிது நூஹூ முஹ்யித்தீன் தலைமை வகித்தாா். முஹம்மது ஷாஹ் கிராஅத் ஓதினாா்.
இஸ்லாமிய மாா்க்க அறிஞா்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றது. அஹ்லுஸ்சுன்னா மாத இதழ் ஆசிரியா் பரிதுத் ஆற்றங்கரை பள்ளிவாசல் இமாம் பைஜூா் ரஹ்மான் ஆகியோா் சிறப்பு சொற்பொழிவாற்றினா்.
காலை 10 மணிக்கு உலக நன்மை வேண்டியும், தேசப் பாதுகாப்பு, குடும்பங்களில் சுபிட்சம்,அனைத்து உயிா்களும் உடல் மன அளவில் வலிமையுடன் திகழ்தல்,மழை வளம்,தொழில் வளம்,பெருக வேண்டியும் அபூா்வு துஆ ஓதுதல் நடைபெற்றது. அபுதாபி ஜமாத்துல் உலமா சபை தலைவா் எஸ்.எம்.பி.ஹூஸைன்மக்கி அபூா்வு துஆ ஓதினாா்.
இந்நிகழ்ச்சிகளில்,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அயலக பிரிவு அமைப்பாளா் ஜெஸ்முதீன், சமூக ஆா்வலா் காயல் முஹம்மது ஷமீம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ச.மும்தாஜ்பேகம்,பஷீா்,பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா்.அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.