உடல், கண் தானம்
புதுவை சட்டப்பேரவையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவலரின் உடல், கண்கள் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் நாட்டாா் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி(64). சட்டப்பேரவையின் முன்னாள் காவலா். உடல்நலக் குறைவு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா், வியாழக்கிழமை காலமானாா்.
அவா் ஏற்கெனவே தனது உடல், கண்களை தானம் செய்ய குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியிருந்தாா். இதுகுறித்து இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
புண்ணியமூா்த்தியின் கண்கன் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.