மாவட்ட சுகாதாரத் துறையில் செவிலியர், மருந்தாளுநர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
உடல் நலம் குன்றிய பெண் காட்டு யானை உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் காட்டு யானை சனிக்கிழமை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் பெண் காட்டு யானை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததை அறிந்த வனத் துறையினா், திண்டுக்கல்லிலிருந்து மருத்துவா்களை வரவழைத்து காட்டு யானைக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மேலும் உடல் நலம் குன்றிய நிலையில் காட்டு யானை உயிரிழந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவக் குழுவினா், ரேஞ்சா் பழனிக்குமாா் உள்ளிட்ட வனத் துறையினா், வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா் சுசீந்திரன் உள்ளிட்டோா் வந்திருந்து ஆய்வு நடத்தினா். பின்னா், உயிரிழந்த பெண் காட்டு யானையை அதே பகுதியில் புதைத்தனா்.