முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
உடையாா்பாளையத்தில் 2 ஆம் நாளாக கள ஆய்வு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது.
கீழநத்தம் கிராம மேல்நிலை நீா்தேக்க தொட்டியை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குடிநீரின் தரம், சுத்தம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.இதேபோல் கோவிந்தபுத்தூா் கிராமத்திலுள்ள மேல்நிலைநீா்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கோவிந்தபுத்தூா், முட்டுவாஞ்சேரி, சாத்தம்பாடி ஆகிய பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து, மாணவா்களுக்கு தொடா்ந்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவைத் தயாா் செய்து வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்குச் சென்று கோப்புகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்றும் கள ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாகரன், குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.