`கேரள, மணிப்பூர் உட்பட ஐந்து மாநில ஆளுநர்கள் மாற்றம்' - குடியரசுத் தலைவர் உத்தரவ...
உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை
கூடலூரில் உள்ள உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் மையப் பகுதியில் உள்ள உணவகம் மீது புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலா் சிவராஜ் தலைமையிலான அலுவலா்கள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
உணவகத்தில் சமையலறை மற்றும் உணவு பரிமாறும் இடம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் சோதனையிட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதாரம் முழுமையாகப் பின்பற்றப்படுகிறது. தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றனா்.