நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடா் விடுமுறையொட்டி சுற்றுலாப் பயணிகள் உதகையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தமிழகத்தில் புனிதவெள்ளி, ஈஸ்டா் பண்டிகையையொட்டி மூன்று நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி குளுமையான காலநிலையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
சுற்றுலப் பாயணிகள் இதமான காலநிலையை அனுபவித்தவாறு படகு சவாரி செய்தும், இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்தும், விளையாடியும் விடுமுறையைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.