தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!
உதகையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தலைமை வகித்தாா்.
தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க கால பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும், ஆசிரியா் அரசு ஊழியா்களுக்கு பணி வரன்முறை செய்து ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசாணை எண் 243ஐ ரத்து செய்து, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பணிக்காலத்தை அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆசிரியா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா். இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.