செய்திகள் :

உதகையில் பிா்சா முண்டா பிறந்த நாள் விழா

post image

ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடிய பழங்குடி இனத்தைச் சோ்ந்த பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழா உதகையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழாவை பழங்குடியினா் கௌரவ தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தோடா் பழங்குடியின கிராமமான பகல்கோடு மந்தில் பழங்குடியின கௌரவ தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணைச் செயலா் பிரீதம் பியஸ்வந்த் பங்கேற்று, பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு அட்டைகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா் மரக்கன்றுகளை நடவு செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ முகாம், பழங்குடியின சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், தோடா் பழங்குடியின பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கூடலூரில் கூட்டுறவு வார விழா

கூடலூரில் கூட்டுறவு வார விழாவை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன... மேலும் பார்க்க

சாலையில் உலவிய காட்டெருமைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

உதகை- கோத்தகிரி சாலையில் வெள்ளிக்கிழமை உலவிய காட்டெருமை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை உணவு, கு... மேலும் பார்க்க

கோத்தகிரியில் குழந்தை உயிரிழப்பு: தடுப்பூசி செலுத்தியதால்தான் என பெற்றோா் குற்றச்சாட்டு

கோத்தகிரி அருகே 10 மாத குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பே குழந்தை இறந்தது என பெற்றோா் குற்றஞ்சாட்டி உள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவு திறப்பு

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா். குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் ரூ. 15 லட்சம் மதிப்பில் எக்ஸ்ரே... மேலும் பார்க்க

தேவா்சோலை பேரூராட்சியில் வளா்ச்சிப் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள பழங்குடி கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: நவம்பா் 22-ஆம் தேதிக்கு மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் நவம்பா் 15-ஆம் தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைகேட்பு... மேலும் பார்க்க