உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்
உத்தரகண்டில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனால் பரபரப்பு நிலவியது.
உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கங்கன்தீப் சிங் கோலி இயற்பியல் ஆசிரியராக உள்ளார். இந்த வார தொடக்கத்தில், அவர் தனது மாணவர்களில் ஒருவரை அறைந்தார். புதன்கிழமை, அதே மாணவர் தனது டிபன் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்து வகுப்பறையில் கங்கன்தீப்பின் முதுகில் சுட்டுள்ளார்.
படுகாயமடைந்த ஆசிரியர் உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் தோட்டா வெற்றிகரமாக அகற்றப்பட்டதை மருத்துவர் மயங்க் அகர்வால் உறுதிப்படுத்தினார். கங்கன்தீப்பின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இருப்பினும் கண்காணிப்புக்காக அவர் ஐசியுவுக்கு மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சமரத் பஜ்வா என அடையாளம் காணப்பட்ட மாணவர், தனது டிபன் பாக்ஸில் துப்பாக்கியை மறைத்து வைத்து வகுப்பறைக்குள் கொண்டு வந்தார். இந்த சம்பவம் காலை இடைவேளை முடிந்து வகுப்பறையை விட்டு கங்கன்தீப் வெளியேறும்போது நடந்தது. மாணவன் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை நோக்கி சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் தப்பிஓட முயன்றா மாணவனை மற்ற ஆசிரியர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109 இன் கீழ், மைனர் மாணவன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.