செய்திகள் :

உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

post image

உத்தரப்பிரதேசத்தில் ரூ.100க்கு ஆசைப்பட்டு சவால் விட்டு ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். அங்குள்ள ஜான்சி அருகில் உள்ள பூனாவாலி காலா என்ற கிராமத்தில் வசித்தவர் உத்தம் ரஜபுத். இவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் அங்குள்ள குளத்தின் கரைக்குச் சென்றார். அவர்கள் அனைவரும் குளத்தின் கரையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் காரசார விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது அவர்களுக்குள் ஒரு சவால் விடுக்கப்பட்டது. குளத்தை நீந்திக் கடந்தால் ரூ.100 கொடுப்போம் என்று அவர்கள் சவால் விடுத்தனர். இந்த சவாலை உத்தம் ரஜபுத் ஏற்றுக்கொண்டார்.

பலி
பலி

உடனே அவர் அவர்கள் முன்னிலையில் ரூ.100க்கு ஆசைப்பட்டு குடிபோதையில் குளத்திற்குள் குதித்து நீந்த ஆரம்பித்தார். அவர் குளத்தில் 50 அடி தூரத்திற்கு நீந்நி சென்றார். ஆனால் அவரால் மேற்கொண்டு நீந்த முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தார். உதவி கேட்டுக் கத்த ஆரம்பித்தார். உடனே அவரது நண்பர்கள் அவரை அப்படியே விட்டு விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

உத்தம் நீரில் உயிருக்குப் போராடுவதை அப்பகுதி வழியாகச் சென்ற சில கிராமவாசிகள் பார்த்தனர். அவர்கள் உடனே உத்தமை மீட்டனர். ஆனால் அவர் அதற்குள் அதிகப்படியான தண்ணீரைக் குடித்து இறந்துவிட்டார். அவரது உடல் உடனே பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து மது அருந்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இறந்து போன உத்தமிற்குத் திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

டெல்லி: 'சோலிகே பீச்சே கியாஹை' பாடலுக்கு நடனமாடிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் தந்தை

டெல்லியில் ரகு (26) என்பவருக்குத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகன் மணமேடையில் மணப்பெண்ணின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் மணமகனின் நண்பர்கள் பாடல்... மேலும் பார்க்க

தாயை மாட்டுவண்டியில் வைத்து இழுத்து வந்த மகன்; கிரேக்கப் பெண்ணின் திருமணம்; கும்பமேளா சுவாரஸ்யங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று மட்டும் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும்... மேலும் பார்க்க

Guillian Barre Syndrome: 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; ஒருவர் மரணம்! - என்ன நடக்கிறது புனேவில்?

கிலன் பார் சிண்ட்ரோம் Guillian Barre Syndrome (GBS). கடந்த 3 வாரங்களாக புனே நகரில் வேக வேகமாக பரவிக்கொண்டிருக்கிற நரம்பியல் நோய் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறா... மேலும் பார்க்க

Rakhi Sawant: மூன்றாம் திருமணம்; பாகிஸ்தான் நடிகரை திருமணம் செய்யும் ராக்கி சாவந்த்!

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை திருமணமானவர். பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற ராக்கி சாவந்த் இரண்டாவது முறையாக திருமணம் செய்த விவாகரத்து செய்தபோது ... மேலும் பார்க்க

`உதவியற்ற நிலையில் அவர் இருந்தார்' - விவாகரத்து மனுவை திரும்ப பெற்றது பற்றி வினோத் காம்ப்ளி மனைவி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு வாரம் மும்பை அருகில் உள்ள தானே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது வீட்டில் உடல் நலம் தேறி வர... மேலும் பார்க்க