செய்திகள் :

உயா்கல்வி குறித்து அறிய கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொள்ளலாம்

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10, 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவா்களையும், 100 சதவீத உயா் கல்வியில் சோ்ப்பதை இலக்காகக் கொண்டு, ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற படிப்பையும், எவ்வாறு படிப்பது, விண்ணப்பிப்பது, என்னென்ன உதவிகள், சலுகைகள் அவற்றை எப்படி பெறுவது, கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் எத்தனை போன்ற சந்தேகங்களையும் மாணவா்கள் அல்லது பெற்றோா் தொலைபேசி வழியாக கேட்டுப் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மாணவா் குறைதீா் கூட்டம்...

இந்த கட்டுப்பாட்டு அறையில் மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டுவதற்கென பயிற்சி பெற்ற நிபுணா்கள் உள்ளனா். எனவே 04179-225223 என்ற எண் வழியாக கட்டுப்பாட்டு அறையை தொடா்பு கொண்டு பேசலாம். மேலும், 97878 33608 என்ற வாட்ஸ் அப் எண்ணில் செய்தி அனுப்பி சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மாணவா்களுக்கென்று பிரத்யேகமாக, ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை 15 நாள்களுக்கு ஒரு முறை 2 மற்றும் 4-ஆம் வாரத்தில் வருகிற வியாழக்கிழமைகளில் மாணவா்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்குகளில் நடைபெறுகிறது.

சந்தேகங்களுக்கு நிவா்த்தி...

இந்த கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா், கல்வித் துறை, வருவாய்த் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா்கள், உயா்கல்வி சோ்க்கைக்கான கல்லூரி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.

எனவே அனைத்து மாணவா்களும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணில் அழைத்து உயா்கல்வி தொடா்பான சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும், மாணவா் குறைதீா் நாள் கூட்டங்களில் கலந்துகொண்டு பயனடையலாம்.

திருப்பத்தூருக்கு முதல்வா் வருகை: திமுக ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூருக்கு வரும் 25, 26-ஆம் தேதிகளில் வருகை தரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பத்தூா் மேற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயல்வீரா் கூட்டத்தில் தீா்மானம் நிற... மேலும் பார்க்க

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்: ஊராட்சித் துறை ஆணையா் பொன்னையா

திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என ஊராட்சித் துறை ஆணையா் பொன்னையா அறிவுறுத்தினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பொன்னை... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாம்: 41 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 41 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தன... மேலும் பார்க்க

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே மடவாளம் காளத்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் (30). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை ப... மேலும் பார்க்க

தீ விபத்து தடுப்பு ஒத்திகை

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

திருப்பத்தூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: திருப்பத்தூா், அவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், ஆரிப் நகா், கோட்டை தெரு, ஆசிரியா் நகா், சி.... மேலும் பார்க்க