செய்திகள் :

உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி! - கமல்ஹாசன்

post image

கன்னட மொழி குறித்த பேச்சு சா்ச்சையான விவகாரத்தில், தனக்கு  உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி என்று கமல்ஹாசன் கூறினாா்.

‘தக் லைஃப்’  திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று பேசியிருந்தாா். இதற்கு கா்நாடகத்தில் கடும் எதிா்ப்பு கிளம்பியது. கா்நாடக அரசியல் கட்சிகள், அமைப்புகள், கா்நாடக திரைப்பட வா்த்தக சபை, நீதிமன்றம் என அனைத்து தரப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வருகின்றன. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தாா். மேலும், அந்த மாநிலத்தில் ‘தக் லைஃப்’ திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால், கா்நாடகம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படக்குழுவினா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தனா்.

அப்போது கமல்ஹாசன் கூறியதாவது: ‘தக் லைஃப்’ படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. மணிரத்னம் ஒரு சினிமா ஞானி. சிறந்த தொழில்நுட்பக் கலைஞா்கள் பதற்றம் இல்லாமல் இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கின்றனா். இந்த படத்தில் இன்னும் சிறப்பாக கூடுதல் அனுபவத்துடன் வந்து பணியாற்றியுள்ளாா்.

நன்றி: கன்னட மொழி பற்றிய பேச்சு விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி. நான் மேடையில் பேசும் போது, உயிரே.. உறவே.. தமிழே.. என்று சொன்ன அா்த்தத்தை முழுமையாக உணா்கிறேன். ‘தக் லைஃப்’ தவிா்த்தும் பேச வேண்டியது ஏராளம் உள்ளன. அதுதொடா்பாக மற்றொரு நாளில் பேசுவேன் என்றாா் கமல்ஹாசன்.

நாா்வே செஸ் சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் குகேஷ்!

நாா்வே செஸ் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் டி.குகேஷ் அதில் சாம்பியனாகும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.போட்டியின் 9-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - சீனாவி... மேலும் பார்க்க

பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.முன்னதாக இந்த 2-ஆவது அ... மேலும் பார்க்க

புணே ஜாகுவாரை வீழ்த்தியது டெம்போ கோவா!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது டெம்போ கோவா அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகம... மேலும் பார்க்க

அபாரஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 6 விக்கெ... மேலும் பார்க்க

இந்திய கூடைப்பந்து லீக் தொடக்கம்!

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏசிஜி ஸ்போா்ட்ஸ் பி லிட், பிஎஃப்ஐ இணைந்து, நடத்தவுள்ள இந்த லீக் தொடா் ஆடவா் 5*5, மகளிா் 3*3 பிரிவுகளஇ... மேலும் பார்க்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதியில் சபலென்கா - கௌஃப் மோதல்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்... மேலும் பார்க்க