நட்சத்திர பலன்கள்: மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை #VikatanPhotoCards
உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய மகளிரணி விளையாடவிருக்கிறது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி மே 11 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு அணிக்கு மற்ற அணியுடன் 2 போட்டிகள் வீதம் மொத்தம் ஒரு அணிக்கு தலா 4 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்
இந்தப் போட்டிகள் பகல் ஆட்டமாக நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்தும் பிரேமதசா பன்னாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
போட்டிக்கான அட்டவணை
ஏப்ரல் 27 - இந்தியா - இலங்கை
ஏப்ரல் 29 - இந்தியா - தென்னாப்பிரிக்கா
மே 1 - இலங்கை - தென்னாப்பிரிக்கா
மே 4 - இந்தியா - இலங்கை
மே 6 -இந்தியா - தென்னாப்பிரிக்கா
மே 8 - இலங்கை - தென்னாப்பிரிக்கா
மே 11 - இறுதிப்போட்டி
இதையும் படிக்க: நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி! -ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்