செய்திகள் :

உலகப் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க் சரிவு! முதலிடத்தில் யார்?

post image

உலகின் முதல் பணக்காரராக லேரி எலிசன் முன்னேறியுள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நேற்றுவரையில் முதலிடம் வகித்து வந்த எலான் மஸ்க், ஒரே நாள் இரவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக உலகின் முதல் பணக்காரர் ஆனார். ஆனால், அதன்பிறகு அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபெசோஸ் மற்றும் ரெனால்ட் நிறுவனர் பெர்னர்ட் ரெனால்ட் ஆகியோரிடம் முதலிடத்தைப் பறிகொடுத்தார். இருப்பினும், மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றிய எலான் மஸ்க், கடந்த 300 நாள்களாக முதலிடத்தை தன்வசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில்தான், புதன்கிழமை காலையில் ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து, அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (81) முதலிடத்தைப் பிடித்தார்.

ஆரக்கிள் நிறுவனத்தில் 41 சதவிகித பங்குகளை லேரி வைத்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் திடீரென அதிகளவில் உயர்ந்ததால், அவரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 101 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தமாக 393 பில்லியன் டாலர் (ரூ. 34.7 லட்சம் கோடி) உயர்ந்தது.

அதுமட்டுமின்றி, சமீபமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா பங்குகள் குறைந்து வரும்நிலையில், அவர் 384 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, மூன்றாம் இடத்தில் மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கும், நான்காம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபெசோஸும் உள்ளனர்.

Larry Ellison is the world’s richest man after $101 billion surge

இஸ்ரேலுக்கு கத்தார் பதிலடியும் மூன்றாம் உலகப் போரும்?

இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் த... மேலும் பார்க்க

நேபாள இடைக்கால அரசு: சுசீலா கார்க்கிக்கு பெருகும் இளைஞர்களின் ஆதரவு!

நேபாளத்தில் இடைக்கால அரசுக்குத் தலைமையேற்க, அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஜென்-ஸி பிரதிநிதிகள் ஆதரவுத் தெரிவித்து வருகின்றனர். நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும்... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளின் விடுதலைக்கான நம்பிக்கையை நெதன்யாகு கொன்று விட்டார்: கத்தார் பிரதமர்!

கத்தார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம், ஹமாஸ் சிறைப் பிடித்துள்ள பிணைக் கைதிகளுக்கான நம்பிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொன்றுவிட்டதாக, அந்நாட்டு பிரதமர் ஷேயிக் முஹம்மது பின் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாரியின் வீட்டை இடித்த மர்ம நபர்கள்!

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்குவாவில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் இருண்ட காலம்: சார்லி கிர்க் கொலை பற்றி டிரம்ப்

சமூக ஆர்வலரும், அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டது கொடூரமான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவின் திரு... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை: கொலையாளி யார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளர், பழமைவாத கொள்கையாளர் என அறியப்படும் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சம்பவ இடத்தில், சந... மேலும் பார்க்க