செய்திகள் :

உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

post image

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகக் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்புடன் இன்று(ஜன. 27) பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க அதிபராக 2-ஆவது முறையாக பதவியேற்றதற்கு டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என் அன்பு தோழர் டொனால்ட் டிரம்புடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன்.

நாங்கள், இருதரப்புக்கும் பரஸ்பர பலனளிக்கும் நம்பிக்கையான ஒத்துழைப்புக்காக பங்களிக்க கடமைப்பட்டுள்ளோம். நம் மக்களின் நலனுக்காகவும் உலக அமைதி, செழிமை, பாதுகாப்புக்காகவும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

c

யமுனையில் அதிகரித்த அமோனியா விவகாரத்தை, நதியில் விஷம் கலந்த குற்றச்சாட்டுடன் கலக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தில்லிக்கு தண்ணீர் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: விவிஐபி பாஸ்கள் ரத்து!

மகா கும்பமேளா பகுதியில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விவிஐபி) வழங்கப்படும் சிறப்பு அனுமதியை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ... மேலும் பார்க்க

காந்தி நினைவு நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று(ஜன. ... மேலும் பார்க்க

தில்லியில் சேவை செய்ய பாஜகவுக்கு ஒருமுறை வாக்களியுங்கள்: மோடி வேண்டுகோள்

புது தில்லி: யமுனை நதியில் ‘விஷம்’ கலக்கப்படுகிறது என்ற ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தில்லியி... மேலும் பார்க்க

பட்ஜெட்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளதையடுத்து தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(ஜன. 30) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற... மேலும் பார்க்க

மோடியும், கேஜரிவாலும் இடஒதுக்கீடுக்கு எதிரானவா்கள்: ராகுல் காந்தி

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியும், தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் இடஒதுக்கீடு, தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரானவா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கு... மேலும் பார்க்க