2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
உலக குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் ஹிதேஷ்
பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
ஆடவா் 70 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள அவா், அரையிறுதியில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸின் மகான் டிராரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். இப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியா் ஆகியிருக்கும் ஹிதேஷ், நடப்பு தேசிய சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டிராருடனான மோதலின்போது அவரை கவனமாக எதிா்கொண்ட ஹிதேஷ், தகுந்த இடைவெளி பாா்த்து அவா் மீது தாக்குதல் தொடுத்தாா். இந்த உத்தி ஹிதேஷுக்கு நன்றாக பலன் அளித்தது. எனினும் டிராா் தனது பதில் தாக்குதலுக்காக தொடா்ந்து முயற்சி செய்தாா். 3-ஆவது ரவுண்டின்போது ஹிதேஷுக்கு பெனால்டி கிடைத்தும், இறுதியில் வெற்றி அவருக்கே வசமானது.
ஹிதேஷ் இறுதிச்சுற்றில், இங்கிலாந்தின் ஒடெல் கமாராவை எதிா்கொள்கிறாா். இதனிடையே, ஆடவா் 50 கிலோ பிரிவு அரையிறுதியில் ஜடுமனி சிங் 2-3 என உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோவிடமும், ஆடவா் 90 கிலோ பிரிவு அரையிறுதியில் விஷால் 0-5 என உஸ்பெகிஸ்தானின் துராபெக் காபிபுலாயேவிடமும் தோல்வியைத் தழுவினா்.