உலக சாதனையுடன் புதிய அணியில் ஒப்பந்தமானார் ஒலிவியா ஸ்மித்!
மகளிர் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக ஒலிவியா ஸ்மித என்ற வீராங்கனை அதிக தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். இவரை ஆர்செனல் கால்பந்து அணி ஒரு மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ.11.60 கோடி மதிப்புக்கு ஆர்செனல் அணி ஒலிவியா ஸ்மித்தை ஒப்பந்தம் செய்துள்ளது.
20 வுமன்ஸ் சூப்பர் லீக் தொடரில் அறிமுகமானபோது ஒலிவியா ஸ்மித் 7 கோல்கள் அடித்தார்.
20 வயதான இளம் வீராங்கனை ஃபார்வேடாக லிவர்பூல் அணியில் விளையாடிய இவர் விங்கராகவும் சென்டர் ஸ்டிரைக்கராகவும் விளையாடக் கூடியவர்.
ஸ்போர்டிங் லிஸ்பென் அணியிலிருந்த ஒலிவியா ஸ்மித் கடந்த ஜூலை 2024-இல் லிவர்பூல் அணியில் சேரும்போதே 2 லட்சம் யூரோ சம்பளத்திற்கு சேர்ந்திருந்தார்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க வீராங்கனை நவோமி கிர்மா 1.1 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.9.45 கோடி) வாங்கியதே மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளமாக இருந்து வந்தது
தற்போது, ஒலிவியா ஸ்மித் இதனை முறியடித்துள்ளார். ஆர்செனல் அணியில் ஒப்பந்தமிட்டு புதிய ஜெர்ஸியை அணிந்துகொண்டார்.
பிறகு அவர், “இங்கிலாந்திலும் ஐரோப்பியாவிலும் மிகப்பெரிய தொடரில் விளையாட வேண்டுமென்பது எனது கனவு. எனது பங்கினை ஆர்செனல் அணியில் செய்லபடுத்த ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஆர்செனல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் இவரை, “இந்த இளம் வயதில் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்தும் அவரது மனநிலை, சுபாவம் மிகவும் பிரமிக்க வைக்கிறது” என மிகவும் புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.