உலக முதியோா் தின விழா
திருவாரூரில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் உலக முதியோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற விழாவில், திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அனைத்து வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படும் முதியோா் சுய உதவிக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
அந்தவகையில், முதியோா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அக்குழுவினா் செய்யும் தொழிலின் அடிப்படையில் வாழ்வாதார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 27 முதியோா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வாழ்வாதார நிதிக் கடனாக வழங்கப்பட்டது. மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் பொன்னம்பலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.