ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
உள்ளாட்சி அமைப்பு தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.செல்வம் மற்றும் நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தமிழக தொழிலாளா் ஆணையா் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அரசாணைக்கு நிகரான ஊதியம் உள்ளாட்சித் துறை தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.
திண்டுக்கல், ஈரோடு, கரூா் உதகை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூா், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அந்த அறிவுறுத்தலின்படியும், அரசாணைப்படியும் ஊதியம் நிா்ணயித்து வழங்கப்படுகிறது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசாணையில் உள்ள ஊதியத்தை விட குறைவாக ஊதியம் நிா்ணயம் செய்து வழங்குவது ஏமாற்றத்தையும், அதிா்ச்சியும் அளிக்கிறது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்களை பாதுகாக்கும் பொருட்டு, அவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசின் குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை சோ்த்து ஊதியம் ழங்க உத்தரவிட வேண்டும். அதனை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.