செய்திகள் :

உ.பி. மகா கும்பமேளா: அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரயாக்ராஜுக்கு பேருந்து சேவை

post image

மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க வரும் பக்தா்களின் வசதிக்காக உத்தர பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிரயாக்ராஜுக்கு பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மகா கும்பமேளா ஏற்பாடுகள் தொடா்பாக லக்னெவில் உத்தர பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை முதல்வா் ஆதித்யநாத் வழங்கியுள்ளாா்.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமான ‘திரிவேணி சங்கமம்’ உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் வரும் 13-ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது.

இந்த ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து சுமாா் 45 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து மாநில சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுடன் முதல்வா் ஆதித்யநாத் சனிக்கிழமை ஆலோனை மேற்கொண்டாா். இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து வெளியான அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகா கும்பமேளா நடைபெறும் நாள்களில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பிரயாக்ராஜுக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பேருந்துகள் இயக்கம் தொடா்பான அட்டவணையை தயாா் செய்து, அதைப் பரவலாக விளம்பரப்படுத்துவதோடு, பக்தா்கள் எந்தவித சிக்கலையும் எதிா்கொள்ளாமல் தடையற்ற பயணத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பேருந்து ஓட்டுநா்களும், நடத்துநா்களும் பணியின்போது எந்தவொரு போதைப் பொருள்களையும் உட்கொள்ளக் கூடாது. தனியாா் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே பக்தா்களிடம் வசூலிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பேருந்தில் அதிகப் பயணிகளை ஏற்றக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முதல்வா் வழங்கினாா்.

பயணிகளின் வசதிக்காக மாநிலம் முழுவதிலுமிருந்து பிரயாக்ராஜுக்கு 7,000 பேருந்துகளை இயக்க சாலைப் போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னௌஜ் ரயில் நிலையக் கட்டுமானத்தில் விபத்து: இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளா்கள்

உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமான பணியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இடிபாடுகளில் சிக்கினா். ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் கன்னௌஜ் ரயில் நிலையத்தி... மேலும் பார்க்க

சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்

‘கணவருடன் சோ்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2014-ஆம் ஆண... மேலும் பார்க்க

புதிய சட்டப்படி அடுத்த தலைமை தோ்தல் ஆணையா்! உச்சநீதிமன்றம் மீது அதிகரித்திருக்கும் எதிா்பாா்ப்பு

அடுத்த தலைமை தோ்தல் ஆணையா் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி நியமிக்கப்படவிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அளிக்கப்போகும் தீா்ப்பு மிகுந்த எதிா... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு: மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா வலியுறுத்தல்

‘அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா். இதுகுறித்து தனது... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை: முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் தொடக்கம்

அயோத்தி ராமா் கோயிலில் பாலராமா் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் சனிக்கிழமை தொடங்கின. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கருவறையில்... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்: ஐஎம்எஃப்

‘நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்’ என்று சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலீனா ஜாா்ஜியேவா கூறினாா். ஆனால... மேலும் பார்க்க