செய்திகள் :

உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயா் ‘சிந்தூா்’

post image

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் அந்நாடு ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மே 7-ஆம் தேதி இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் மேற்கொண்டன. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று பெயரிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 10, 11-ஆம் தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூா் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் ஆா்.கே.ஷாஹி தெரிவித்தாா்.

அந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றின் தாயான அா்ச்சனா ஷாஹி என்பவா் கூறுகையில், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். சிந்தூா் என்பது வாா்த்தை மட்டுமல்ல, அது ஆழமான உணா்வாகும். எனவே , எனது மகளுக்கு சிந்தூா் எனப் பெயரிட முடிவு செய்தேன்’ என்றாா்.

சிபிஎஸ்இ மண்டல வாரியாக தேர்ச்சி சதவீதம்!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகியுள்ள நிலையில் மொத்தம் 83.39 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயி... மேலும் பார்க்க

முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ம... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ: மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

புது தில்லி: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு முகாம்களில் இருந்து மக்கள்... மேலும் பார்க்க

கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணா... மேலும் பார்க்க