செய்திகள் :

ஊட்டி: காரை மறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; மழுப்பிய சார் பதிவாளர்; என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டியிலிருந்து நேற்று மாலை வாடகை காரில் கிளம்பியிருக்கிறார்.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஷாஜகான் காரை திடீரென வழிமறித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரது காரை சோதனை செய்துள்ளனர். காருக்குள் சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதற்கான விவரம் கேட்டுள்ளனர். மழுப்பலான பதிலைச் சொல்லிச் சமாளித்திருக்கிறார் ஷாஜகான்.

ஷாஜகான்
ஷாஜகான்

சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஷாஜகானை அவரின் அலுவலகத்திற்கே திரும்ப அழைத்துச் சென்றுள்ளனர். நேற்றிரவு வரை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டும், அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்துத் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், "எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சார் பதிவாளர் ஷாஜகானின் காரை சோதனை செய்தோம். கணக்கில் வராத 3 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வேலூர்: மாயமான பெண் குழந்தை கிணற்றுக்குள் மிதந்த கொடூரம்; கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள தட்டப்பாறை ஏரியின் கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி, விவசாயி. இவரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா, கடந்த 28-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக்கொண்டிர... மேலும் பார்க்க

பிரியாணிக் கடைக்கு உரிமம் வழங்குவதாகப் பணமோசடி; நீதிமன்ற வாசலில் பாதிக்கப்பட்ட 249 பேர் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், பிரியாணிக் கடை கிளை அமைப்பதற்கு உரிமம் வழங்குவதாக 4 மாநிலங்களைச் சேர்ந்த 249 பேரிடம் கோடிக்கணக்கான‌ ரூபாய் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக போலீஸ... மேலும் பார்க்க

Sexsomnia: ``ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபட்டவர் குற்றமற்றவர் என தீர்ப்பு'' - ஏன்?

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், டிமோதி மால்கம் ரோவ்லேண்ட் என்ற நாற்பது வயது நபர், செக்ஸோமேனியா என்ற நோய் இருப்பதனால் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றமற்றவர் எனத் த... மேலும் பார்க்க

ECR கார் சம்பவம்; `அரசியல் கட்சிக்கு தொடர்பா?' - காவல் துணை ஆணையாளர் கார்த்திகேயன் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்... மேலும் பார்க்க

"என் கார்மீது மாட்டை மோதவிட்டுக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம்..." - இமான் அண்ணாச்சி பேட்டி

எப்போதும் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சியை சீரியஸ் ஆக்கியிருக்கிறது, சமீபத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவம். குடும்பத்துடன் காரில் சென்ற இமான் அண்ணாச்சி, சாலை விபத்திலிருந்து தப்ப... மேலும் பார்க்க

ரூ.18 லட்சம் கொள்ளை: திருடனுடன் சேர்ந்து மசாஜ் செய்த காவலர்கள்... வடிவேலு பட பாணியில் தப்பி ஓட்டம்!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள நாக்டா என்ற இடத்தில் இருக்கும் சாராய கம்பெனிக்குள் நுழைந்த திருடர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இது தொடர்பாக ப... மேலும் பார்க்க