செய்திகள் :

ஊட்டி மாரியம்மன் கோயில்: பாரம்பர்ய தேரோட்டம் காண அலையெனத் திரண்ட மக்கள்; உப்பு செலுத்தி வழிபாடு!

post image

மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சந்தைக் கடை மாரியம்மன் திருக்கோயில்.

மாரியம்மன் மற்றும் காளியம்மன் ஆகிய இரு பெண் தெய்வங்களும் ஒரே கருவறையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தனித்துவமாக இந்த ஆலயம் விளங்கி வருகிறது.

பக்தர்கள்

சித்திரை மாதத்தில் நடத்தப்படும் ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பே விழா தொடங்கி நாள்தோறும் உபயதாரரகளின் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். முத்தாய்ப்பாக இறுதியில் அம்மனின் பெரிய தேர் பவனி கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த மாதமே தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் உபயதாரரகளின் பங்களிப்பில் தேர் பவனி நடைபெற்று வந்தன.

விழாவின் மிக முக்கிய நிகழ்வான பெரிய தேர் எனப்படும் ஊட்டி மாரியம்மன் தேர் பவனி நேற்று நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் காலை‌10 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, திருத்தேரில் கலசம் பொருத்தி விழா ஏற்பாடுகளை தொடங்கினர்.

ஊட்டி மாரியம்மன்

நேற்று காலை‌ 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 9 மணிக்கு விநாயகர்‌ மற்றும் மாரியம்மனுக்கு‌ அலங்கார பூஜை, சிறப்பு கனகாபிஷேகம் நடைபெற்றன.‌

அலங்கரிக்கப்பட்ட தேருக்குள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மனின் தேர் பவனி மதியம் 2 மணியளவில் தொடங்கியது.

திரளான பக்தர்கள் முன்னிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர்‌ லட்சுமி பவ்யா தன்னீரு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் பவனி எம்.எஸ் லைன் வழியாக ஊட்டி காஃபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, லோயர் பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்து லாந்தர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்தது.

பக்தர்கள்

அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் உப்பினை தேர் மீது வாரி இறைத்தால் கஷ்டங்கள் கரையும் என்பது நம்பிக்கை. அலையென சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் மீது உப்பு பொட்டலங்களை மழையெனத் தூவி பாரம்பர்ய‌ நேர்த்தி கடனை‌ செலுத்தி வழிபட்டனர்.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊட்டியில் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்களும் இணைந்து மேற்கொண்டனர். நாளை நடைபெற இருக்கும் விடையாற்றி உற்சவத்துடன் ஊட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா இனிதே நிறைவடைய இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா: திருக்கொம்பு நடுதலுடன் தொடக்கம்.. | Photo Album

கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு நடுதலுடன்கௌமாரியம்மன் திருக்கொம்பு... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: சங்கடங்கள் தீர்க்கும் சந்தனம் சமர்ப்பணம்; செய்வது எப்படி? - விஷேச வழிபாடுகள்

தமிழர்கள் வாழ்வியலில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்கள். ஓர் ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் பௌர்ணமி தினங்களில் வழிபாடு செய்வது விசேஷம் என்பதைக் கண்டறிந்த நம் முன்னோர்கள், அந்த நாளில் பெரும் விழாக்க... மேலும் பார்க்க

தீச்சட்டி, அலகு... பக்தி பரவசம்; விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: Photo Album

பங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி ... மேலும் பார்க்க

"உனக்கென்ன வேணும் சொல்லு" - பிள்ளைகளைத் தோளில் சுமந்து பங்குனி விழாவை ரசித்த தந்தைகள் | Photo Album

பங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாபங்குனி திருவிழாகிட்களைப... மேலும் பார்க்க

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா - மஞ்சள் நீராட்டு விழா உற்சாக கொண்டாட்டம் | Photo Album

மஞ்சள் நீராட்டு விழாஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாமஞ்சள் நீராட்டு விழாஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாமஞ்சள் நீராட்டு விழாமஞ்சள் நீராட்டு விழாமஞ்சள்... மேலும் பார்க்க