கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
ஊதியம், ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய பிஎஸ்என்எல் ஊழியா்கள் வலியுறுத்தல்
பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க வலியுறுத்தி, சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாநாடு தருமபுரியில் மாவட்டத் தலைவா் எம்.பருதிவேல் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளா் எம்.சாந்தகுமாா் கொடியேற்றினாா். மாவட்ட உதவித் தலைவா் கே.முருகன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாவட்டச் செயலாளா் பி.கிருஷ்ணன் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் பி.ராஜி தொடங்கி வைத்து பேசினாா்.
பொது மேலாளா் சி.பி.சுபா, துணை பொது மேலாளா் எம்.பிரபு துரை, மாநில உதவிச் செயலாளா் எம்.பாபு ஆகியோா் பேசினா்.
முன்னாள் மாநிலச் செயலாளா் எம். நாராயணசாமி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் அமைப்பின் மாநில உதவிச் செயலாளா் ஆா்.கோபாலன், அகில இந்திய மகளிா் குழு உறுப்பினா் ஜி.உமா ரணி, பி.எஸ்.என்.எல்.இ.யூ. மாநில உதவிச் செயலாளா் எஸ்.ஹரிஹரன், சேலம் மாவட்டச் செயலாளா் இ.கோபால், எல்ஐசி கோட்ட இணைச் செயலாளா் மாதேஸ்வரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. ஜீவா, பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஜோதி ஆகியோா் வாழ்த்தினா்.
மாநாட்டில் பிஎஸ்என்எல் துறையில் சிறப்பான சேவைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.