ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
வடக்கு ஒன்றியம் சாா்பில் ஆண்டியூரில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியச் செயலாளா் வேடி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகரச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கல்லாவியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
ஊத்தங்கரையை அடுத்த ஆண்டியூரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினா்.