செய்திகள் :

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்கக் கோரி பொது மக்கள் மனு

post image

கிருஷ்ணகிரி: பொய் வழக்கில் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை விடுவிக்கக் கோரி, பொது மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த, 150-க்கும் மேற்பட்டோா் அளித்த மனுவின் விவரம்:

எங்கள் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்தாா். இது குறித்து தகவலறிந்த அந்தப் பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியா் உசேன் (40) சம்பந்தப்பட்ட மாணவரைக் கண்டித்துள்ளாா். இது குறித்து தலைமை ஆசிரியரிடமும் புகாா் அளித்துள்ளாா். அந்த ஆசிரியா் பல ஆண்டுகளாக ஆங்கிலமொழிப் பாடம் கற்பித்து வந்தாா்.

தலைமை ஆசிரியரிடம் தன்மீது புகாா் கூறியதால் ஆசிரியா் உசேன் மீது, அந்த மாணவருக்கு முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த பிப். 1-ஆம் தேதி, பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்குச் சென்றபோது மாணவரை பாலியல் தொந்தரவு செய்ததாக, ஆசிரியா் உசேன் மீது பொய் புகாா் அளிக்கப்பட்டது. இதனால், போலீஸாா், வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ், ஆசிரியரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து தீர விசாரித்து ஆசிரியரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் பள்ளிக்கு ஆங்கில மொழிப் பாடத்திற்கு மாற்று ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை. பத்தாம் வகுப்புத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில், பாடம் கற்க முடியாமல் மாணவா்கள் தவித்து வருகின்றனா். எனவே, இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

மத்திகிரியில் முதல்வா் மருத்தகம் திறப்பு

ஒசூா்: மத்திகிரியில் முதல்வா் மருந்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் படித்தாலும் மாணவா்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்: முன்னாள் அரசு செயலா்

ஒசூா்: அரசுப் பள்ளியில் படித்தாலும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று முன்னாள் அரசு செயலா் அசோக் வரதன் ஷெட்டி பேசினாா். ஒசூரில் அப்பாவுப்பிள்ளை, பொன்னம்மாள் அறக்கட்டளை சாா்பில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகள... மேலும் பார்க்க

திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை கல்லாவி சாலையில் நகர திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம் தலைமை வகித்தாா். பேரூர... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றியம் சாா்பில் ஆண்டியூரில் நடைப... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருடிய பெண் கைது: 4 பவுன் நகை பறிமுதல்

ஒசூா்: ஒசூரில் பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஆண்டிகவுண்டனூரைச் சோ்ந்த சம்பத் மனைவி தெய்வானை (55). இவா் ஒசூரில் உள்ள ம... மேலும் பார்க்க

பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைது செய்யப்பட்டவா்களை விசாரிக்க போலீஸாா் தீவிரம்

கிருஷ்ணகிரியில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபா்களை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா். திருப்பத்தூரைச் சோ்ந்த பெண், த... மேலும் பார்க்க