தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை கல்லாவி சாலையில் நகர திமுக சாா்பில் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு தெருமுனை பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா, நகரச் செயலாளா் தீபக், மருத்துவா் அணி மாவட்டத் தலைவா் மருத்துவா் கந்தசாமி, வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டு, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டு, கடைகள்தோறும் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனா்.
அதேபோல, வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஊத்தங்கரை வட்டார வளரச்சி அலுவலகம் முன் ஹிந்தி திணிப்பு எதிா்பு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் மூன்றம்பட்டி குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், நகர அவைத் தலைவா் தனிகை குமரன், மிட்டப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சின்னத்தாய் உள்பட பலா் கலந்துகொண்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கினா்.