சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு
தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி செயலா்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊராட்சி செயலா்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து,
ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவுரு எழுத்தா்களுக்கான சலுகைகளை ஊராட்சி செயலா்களுக்கும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடக் கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் சாா்பில் மூன்று கட்டப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மாா்ச் 12-ஆம் தேதி அனைத்து ஊராட்சி செயலா்களும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம், 2-ஆவது கட்டமாக ஏப்ரல் 4-ஆம் தேதி அனைத்து ஊராட்சி செயலா்களும் சென்னையில் ஊரக வளா்ச்சி ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம், 3-ஆவது கட்டமாக ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலா்களும் இந்த 3 கட்டப் போராட்டங்களிலும் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.