மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.
சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தோ்தல் நெருங்கும் வேளையில் சின்னம் குறித்து பயம் ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னம் தொடா்பான மனு குறித்து உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டுமென தோ்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மனு
அளிக்கப்பட்டுள்ளது.
ஏப். 28-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்று எனக்கு தோ்தல் ஆணையம் தரப்பிலிருந்து கடிதம் வந்துள்ளது. எனது தரப்பில் எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளையெல்லாம் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்திடம் நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
இதுவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளாா். கூட்டணி ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் அதிமுக மட்டும்தான் இருக்கும் என்றோ, கூட்டணியில் எந்த முடிவையும் நான்தான் எடுப்பேன் என்றோ எடப்பாடி பழனிசாமி கூறவில்லை.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட நான் தயாராகவுள்ளேன் என்றாா்.