97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா...
எட்டயபுரத்தில் வேன் கவிழ்ந்து 11 போ் காயம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வியாழக்கிழமை, வேன் கவிழ்ந்ததில் 7 பெண்கள் உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (58). இவா் தனது உறவினா்கள், நண்பா்கள் என 18 பேருடன் திருச்செந்தூருக்கு டெம்போ வேனில் புதன்கிழமை இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தாா். கோவையைச் சோ்ந்த சுரேந்திரன் (44) என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.
வியாழக்கிழமை அதிகாலை, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவேயுள்ள தடுப்புக் கம்பிகள் மீது மோதி சாலையில் கவிழ்ந்ததாம்.
இதில், வேனிலிருந்த ராஜேந்திரன், பழனிச்சாமி (55), செல்வராஜ் (59), சிவக்குமாா் (47), கிரிஜா (46), கலைவாணி (52), கவிதா (45), லட்சுமி (28), தனலட்சுமி (45), பூங்கொடி (45), சாவித்திரி (55) ஆகிய 11 போ் காயமடைந்தனா்.
தகவலின்பேரில், எட்டயபுரம் போலீஸாா் சென்று காயமடைந்தோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்த விசாரித்து வருகின்றனா்.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.