செய்திகள் :

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

post image

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது, அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. காங்கிரஸ் போல் தில்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது.

கருத்துக்கணிப்பில் கூட முதல்வர் ஸ்டாலின் முதன்மை பெறவில்லை, மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. ஒரு மாநிலத்தில் மோசமான முதல்வராக இருந்தாலும் 40-43% ஆதரவு இருக்கும். ஆனால் ஸ்டாலினுக்கு 25% தான். விஜய தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். திமுக எதிராக தமிழகத்தில் அதிக போராட்டங்களை நடத்தியது பாஜக. ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர், நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பது எந்த விதத்திலும் தவறில்லை.

ரஷிய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியது!

பாஜக எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது. இந்தியா முழுவதும் பிரசாரத்திற்கு சென்றுள்ளேன். 13 மாநிலங்களில் 3 ஆண்டுகளில் பிரசாரம் செய்துள்ளேன். யாரை பற்றியும் நான் கடுமையாக விமர்சிக்கவில்லை. கருத்துகளை கருத்துகளாக வைத்திருக்கிறேன். விஜய், செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதில் அரசியல் காரணம் இல்லை. திமுகவை கொள்கை ரீதியாக பாஜக எதிர்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க