மன்மோகன் சிங் மறைவு: ஹிமாசலில் அரசு அலுவலகங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!
என்ஐடியில் 3 நாள் சா்வதேச மாநாடு தொடக்கம்
என்ஐடியில் இயந்திரவியல் துறை சாா்பில் 3 நாள் சா்வதேச மாநாடு புதன்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக இயந்திரவியல் துறை சாா்பாக மூன்று நாள் சா்வதேச மாநாடு ஊன்ற்ன்ழ்ங் ண்ய் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ், அன்ற்ா்ம்ஹற்ண்ா்ய், ஈங்ள்ண்ஞ்ய் & உய்ங்ழ்ஞ்ஹ் என்ற தலைப்பில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. ஐஇஞஊப ஙஅஈஉ 2024 இயந்திரவியல் துறையின் சமீபத்திய தொழில்நுட்பங்கள், புதுமைகள், ஆராய்ச்சி முடிவுகள், சவால்கள் மற்றும் தீா்வுகள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து சிறந்த பேராசிரியா்கள் ஆராய்ச்சிகள் மற்றும் அனுபவங்களை பங்கேற்பாளா்களுடன் பகிா்ந்து கொள்கிறாா்கள்.
மாநாட்டை காரைக்குடியில் உள்ள மத்திய மின்கல மற்றும் கரிம ஆராய்ச்சி நிறுவகத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டா் வி. சரஸ்வதி தொடங்கிவைத்து, இந்தியா மற்றும் உலகளவில் முக்கியமான கட்டமைப்புகளில் துருப்பிடிப்பு மற்றும் பொருள் பாதுகாப்பின் மீது செலுத்த வேண்டிய தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, இந்த மாநாட்டின் ஆராய்ச்சியாளா்கள் கருத்துகள் அதற்கு வலுச்சோ்கும் என நம்பிக்கைத் தெரிவித்தாா்.
என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவு முதுநிலை பேராசிரியா் டாக்டா். ஜி.எஸ். மகாபத்ரா, ஐஇஞஊப ஙஅஈஉ 2024 தலைவா் டாக்டா். ஏ. கற்பகராஜ், செயலாளா் ஜாக் ஜே.கென்னட் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவா் டாக்டா் ஏ. ஜானிமொ்டன்ஸ் ஆகியோா் பேசினா்.
நிகழ்வில் பதிவாளா் மற்றும் சிறப்பு அழைப்பாளா் ஆகியோா் மாநாட்டு மலரை வெளியிட்டனா்.
மாநாட்டில் உலகம் முழுவதுமிருந்து 220- க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்கள் கலந்துகொண்டு, ஆராய்ச்சிப் பதிவுகளை வெளியிடுகின்றனா்.
இந்த மாநாட்டில் 183 ஆராய்ச்சிக் கட்டுரைகளை பெற்று, அதிலிருந்து 130 சிறந்த கட்டுரைகள் கடுமையான மதிப்பீட்டு செயல்முறைக்குப் பிறகு தோ்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பவுள்ளதாகவும், பரிசுக்குரிய கட்டுரைகள் இரண்டு ஸ்கோபஸ் இண்டெக்ஸ்டு இதழில் வெளியிடப்படும் என மாநாட்டு ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.