Padma Awards: அஜித் குமார், அஷ்வின், செஃப் தாமு, பறையிசை வேலு ஆசான்; பத்ம விருது...
'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?
ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி.
இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது அப்பா பாகிஸ்தானில் இருந்தப்போது இந்தப் பெண்மணி பிறந்துள்ளார். இதனால், இவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக ஆகிவிட்டார்.
கடந்த வாரம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையொட்டி, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு நோட்டீஸுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்தப் பெண்ணுக்கும் அந்த நோட்டீஸ் சென்றுள்ளது. இதனால், அவரும், அவரது குடும்பமும் பெரும் அதிர்ச்சியை அடைந்துள்ளது.

தனது நான்கு வயதில் அப்பா உடன் இந்தியா வந்துவிட்ட அந்தப் பெண்மணி, இந்தியாவில் தான் முழுக்க முழுக்க வளர்ந்துள்ளார். பலசோர் மாவட்டத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து, இரண்டு மகன்களும் அவருக்கு உள்ளனர்.
2023-ம் ஆண்டு புற்றுநோயால் அவரது கணவர் இறந்துள்ளார். அதன்பிறகு, தனது மகன்களுடன் வசித்து வருகிறார் இந்தப் பெண்மணி.
68 ஆண்டுகள் இந்தியாவிலேயே வாழ்ந்த இவருக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, முதியோர் ஓய்வூதிய அட்டை உள்ளிட்டவைகள் இருக்கிறது.
இந்த நிலையில், இவரை இப்போது வெளியேற சொல்லியிருக்கிறது இந்திய அரசு. இதுக்குறித்து அவர் கூறுகையில், "நான் இங்கே தான் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ்ந்துள்ளேன். இங்கே தான் நான் சாக வேண்டும். இந்த வயதில் நான் ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? அந்த நாட்டிற்கு நான் இதுவரை சென்றதே இல்லை.
நாங்கள் எதாவது தப்பு செய்திருந்தால், அரசாங்கம் எங்களை சுடட்டும். ஆனால், நாட்டை விட்டு வெளியேற மட்டும் சொல்ல வேண்டாம்" என்று கதறுகிறார்.

இவர் தனது உடல்நிலை காரணங்களால் இங்கே சிகிச்சை எடுத்து வருகிறார்.
தங்களது அம்மாவை இங்கேயே இருக்க செய்ய வேண்டும் என்று அரசிடம் அவரது மகன்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து அதிகாரிகள், "அரசாங்கம் எங்களுக்கு பிறப்பித்த உத்தரவுப்படி, அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்தியாவை விட்டு போக விரும்பதாவர்கள் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் அரசாங்கம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளனர்.