செய்திகள் :

என் வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் பாரதியின் பங்கு - நெகிழ்ச்சி பகிர்வு | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.

பேதை

முண்டாசுக் கவி பாரதியை எனக்கு முதன் முதலில் எப்போது தெரிந்தது ? ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலில் இருக்கலாம். சிறு வயதில் பரிச்சயமான பாடல் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலாக இருக்கலாம், ஒரு மாறுவேட போட்டியில் என் தங்கை பாரதியார் வேடம் அணிந்து இப்பாடலை மேடையில் பாடியதாக நினைவு.

பெதும்பை:

அதன் பிறகு நிறைய பாரதியார் பாடல்கள் தமிழ் நூல்களில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஐந்தாம் வகுப்பு என்று நினைவு. சக மாணவன் ஒருவன் பள்ளி சுதந்திர தின விழாவின் போது `பாரதி ஒரு பைத்தியம்’ என்ற தலைப்பில் உரையாற்றினான். அவனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். பாரதியாரை ஒருவர் பைத்தியம் என்று எப்படி கூறலாம் என்ற நோக்கில் தான் நான் அந்த உரையை கவனிக்க ஆரம்பித்தேன். இன்றும் எனக்கு நினைவிருக்கிறது “வள்ளுவனின் பேரனும் காதில் நாவை பெற்றிருந்தானோ” என்று பேசி, முடிவில் `நீங்களும் நானும் பைத்தியமாவது’ என்று முடித்தான்.

எனக்கு அது பாரதியின், தமிழின் ஒரு மற்றொரு பரிமாணத்தை காட்டியது.

அதன் பிறகு நிறைய பாரதியார் பாடல்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். பாரதியின் பாடல்களோடு வளர்ந்தேன். அது எனக்குள் நாட்டுப்பற்று வளர உதவியது.

பாரதி

மங்கை

பாரதியாரின் பாடலான தாயின் மணிக்கொடி பாரீர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொடி ஏற்றிய பிறகு குழுவாய் சென்று பாடுவோம். அப்போதிருந்தே எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.

பாரதியார் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். ஆனந்தமாக கொண்டாடுவோம் என்ற பாடலை எப்படி அதற்கு முன்னமே எழுதியிருந்தார் என்பது மிகப் பெரிய வினாவாகவே இன்றும் இருக்கிறது.

பாரதியின் பாஞ்சாலி சபதம் மனப்பாடப் பகுதியை தவிர்த்து முழு செய்யுளையும் படித்த போது ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தார். அதன் பிறகு நிறைய தமிழ் ஆசிரியர்கள் பாடல்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாடல் என்றுமே தனித்துவமாக இருக்கும் தாய்நாடு என்பதை தாண்டி தந்தை நாடு என்று பாரதத்தை குறிப்பிடுவார்.

எட்டாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்கள் பாரதியை கண்முன்னே நிறுத்தினார்கள். எல்லாவற்றிலும் பாரதியின் பாட்டுக்களை எடுத்துக்காட்டாக கூறி ஒவ்வொரு தலைப்பு நடத்தும் போதும் பாரதியின் பிற பரிமாணங்களை எடுத்துரைத்தனர்.

அதன் பிறகு கல்லூரியில் இன்ஜினியரிங் படித்ததால் பாரதியை அந்த அளவுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு திருமணம் முடிந்த லண்டனில் சிறிது காலம் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அங்குள்ள WEMBLEY நூலகத்தில் நிறைய தமிழ் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக பாரதியை பற்றி நிறைய புத்தகங்களை படிக்க முடிந்தது.

மகாகவி பாரதியார்

பேரிளம் பெண்:

இன்றும் அவரது பாடல்களைப் படிக்கும் போது எனக்கு அது வேறு ஒரு பரிமாணத்தில் வேறு ஒரு புரிதலை கொடுக்கிறது. சிறுமியாக இருந்து படித்த போது கிடைத்த புரிதல் ,வேறு மங்கையாக இருந்த போது கிடைத்த புரிதல் வேறு இதோ இன்று பேரிளம் பெண்ணாக இருக்கும் போது கிடைக்கின்ற புரிதல் வேறு ,ஆனால் அது இன்றளவும் எனக்கு தேவையாக இருக்கிறது .

நமக்கு வீட்டில் சொல்லிக்கொடுத்தது எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும், நமது விருப்பங்களை கடவுளிடம் கூற வேண்டும் அவர் எப்படி நமக்கு அருள் வழங்குவார் என்று தானே ஆனால் பாரதியோ அந்தக் கடவுளையே நண்பனாக, ஏன் கண்ணன் என் சேவகன் என்று கூட பாடியவர். பாரதி கடவுளின் மற்றொரு பரிமாணத்தை எனக்கு காட்டினார்.

கடவுள் நம்முடனே இருக்கிறார் நம்மோடு வாழ்கிறார். நமக்கு நன்மை செய்பவனாக , தாயாக தந்தையாக சேவகனாக நமது பிள்ளையாக அனைத்திலும் கடவுளைப் பார் என்று எனக்கு கடவுளின் மற்றொரு பரிமாணத்தை காட்டியவர் பாரதி.

அதில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார். காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே என்றம் நீ கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே என்று பாடியும் தீக்குள் விரலை வைத்தாலும் கண்ணனே என்று காட்டியவர்.

பாரதி அன்னை பராசக்தியை மிரட்டுகிறார். நீ வறுமையை நீக்காவிட்டால் நான் நாத்திகன் ஆகிவிடுவேன் என்று . இது நம் வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வல்லவா. பெற்றோர்களிடம் ஏதாவது வேண்டுமென்று குழந்தைகள் அடம்பிடித்து இப்படித்தானே பேசுவார்கள் அப்படி அவர் சிவ சக்தியோடு பேசுகிறார் .

மகாகவி பாரதி

இன்றும் கடவுளை வணங்குபவர்கள் பெண்களை ஒழுங்காக நடத்துவதில்லை .” பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் ” என்று பெண்களை சக்தியின் அம்சமாகவே பார்த்தார். பாரதியின் எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்தவர் பாரதியின் மனைவி செல்லமா என்பதை ஒருநாளும் மறுக்க முடியாது.

பாரதி ஒரு புரட்சியாளர், தேசியவாதி, சக்தி உபாசகர், பெண்ணியவாதி, கண்ணம்மாவின் காதலன் என்று பல்வேறு தலைப்புகளில் கவிபாடி சிகரம் தொட்டவர். நான் இன்றும் கவிஞர்களில் பாரதியை தேடுகின்றேன் ஆனால் பாரதியைப் போல் அனைத்திலும் உச்சந்தொட்டவர் எவருமில்லை.

“சாத்திரங்கள் பலபல கற்பாராம்; சவுரியங்கள் பலபல செய்வராம்;” என்றும்,

“இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை என்று என்னுள் உந்துசக்தியாக என்னை பாரதியே இயக்குகிறார் என்றே நம்புகிறேன் . இன்று என் மகள் “சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா “ என்று பாடினால் அதிலும் என் பாரதியே தெரிகிறார்.

பாரதி இன்னமும் புதுமையாக இருக்கிறார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அவர் என்றும் புதுமையாகவே இருப்பார் ஏனெனில் அவர் மகாகவி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

அந்த காய்கறிக்கடை பாட்டி டு பக்கத்து வீட்டு ராஜி அக்கா... ஒரு ஆண்டு என்னவெல்லாம் செய்யும்?

புது வருடம் தொடங்குகிறது. எல்லோருக்கும்ஏதோ கனவுகள், ஆசைகள், இலக்குகள், எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், ஒரு ஆண்டு தொடங்குவது போல வருடம் முழுவதும்... மேலும் பார்க்க

"உசுரோட இருந்தப்போ ஒரு பட்டு சேல வாங்கிக்கொடுக்காம விட்டுட்டேனே"- ஒர் ஆணின் சேலை தினப் பகிர்வு

இன்று உலக புடவைகள் தினமாம்... அம்மாவிடம் சொல்லும்போதே, `புடவையே இல்லை' என வழக்கமான புலம்பல்களை ஆரம்பித்தார். அலமாரியை திறந்தால் மஞ்சள், பச்சை, சிவப்பு, ஊதா என எல்லா வண்ணத்திலும் 20 புடவைகள் இருந்தது.'... மேலும் பார்க்க

உலகப் புகழ்பெற்ற மூக்குகள்.. வாசனை சொல்லும் நினைவுகள்..! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை: பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்கள் - `My Wife, My Abuser’ ஆவணப்படமும் ஆய்வுகளும்

‘My Wife, My Abuser’‘குடும்ப வன்முறை’ என்றவுடன் ஓர் உயரமான, கட்டுமஸ்தான ஆண், அவரின் பெண் துணையை துன்புறுத்துவதுதான் நம் கண் முன்னால் நிழலாடும். செய்திகளிலும் அதுவே சொல்லப்படும். சினிமாவிலும் அவையே காட... மேலும் பார்க்க

ஆபிஸ் அனுபவம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க